சங்க பொது செயலாளர் கைது மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்: திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொது செயலாளர் நம்பிராஜன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருக்கழுக்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகள்   திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொது செயலாளராக இருப்பவர் நம்பிராஜன். இவரை போலீசார் நேற்று தர்மபுரியில் கைது செய்தனர். இதனை கண்டித்து திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்தினாளிகள் சங்க செயலாளர் தாட்சாயினி தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் தாட்சாயணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்தினாளிகள் சாலையில் அமர்ந்து  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது  குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிட கேட்டு கொண்டதின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை