சங்கை அறுத்துடுவேன்… போலீசாருக்கு மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர்:மாஸ்க் அணியாமல் வந்தவருக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரம்

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் போலீசார் சோதனை சாவடி அமைத்து, வாகன தணிக்கை செய்து வருகின்றனர். அங்கு நேற்று முன்தினம் மாலை மாஸ்க் அணியாமல் சுற்றிவந்த முரளி என்ற வாலிபருக்கு  200 அபராதம் விதிக்கப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த சூரமங்கலம் இந்து முன்னணி செயலாளர்செல்லபாண்டியன், “டூட்டி போட்டா சும்மா வந்து உட்கார்ந்துட்டு  போயிடணும். தேவையில்லாமல் வழக்கு போடக்கூடாது. எல்லோர் சங்கையும் அறுத்துபுடுவேன். செக்போஸ்ட்டை நொறுக்கிவிடுவேன். எங்க ஆளுக்குபோன் பண்ணுவேன். இந்த செக்போஸ்ட்டே இல்லாம ஆக்குவேன்” என்றதோடு அருவருக்கதக்க வார்த்தையால் திட்டுகிறார்.  மேலும் அவர், ‘‘இந்து முன்னணின்னா மரியாதை ெகாடுக்கணும். ஏய்.. நீ இந்துவா? முஸ்லீமா?” என கேட்டு போலீசாரை அடிக்க பாய்ந்தார். பின்னர்’ நான் இந்து முன்னணி தலைவன். உனக்கு என்ன பவர் இருக்கோ, அதே பவர் எனக்கும் இருக்கு. வேலையை காலி பண்ணிடுவேன். கொண்டலாம்பட்டியே என் கன்ட்ரோல்ல இருக்கு. அராஜகம் பண்றீங்களா? நானும் அராஜகம் பண்ணுவேன். ஆர்ப்பாட்டம் செய்வேன் என கூறுகிறார். இந்த வீடியோ நேற்று வெளியாகி வைரலானது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.வில்லியம் ஜேம்ஸ் கொடுத்த புகாரின்பேரில், இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் மீது, கொலைமிரட்டல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மத உணர்வை தூண்டும் வகையில் பேசுதல் உள்பட 5  பிரிவுகளின் கீழ் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவருடன் வந்த கிளை செயலாளர் தமிழ்செல்வன் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது