சங்கராபுரம் அருகே தீவிபத்தில் ரூ.3 லட்சம் கரும்புகள் எரிந்து சேதம்

 

சங்கராபுரம், ஜூலை 24: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ளது பூட்டை கிராமம். இக்கிராமத்தில் வசித்து வருபவர் மாரி மகன் பாஸ்கர், விவசாயி. இவருக்கு, அதே கிராமத்தில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டும், மேலும் ஊடுபயிராக 500 தென்னங்கன்றுகளையும், 500 வாழை பயிர்களையும் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென பாஸ்கரின் கரும்புக்காடு தீப்பற்றி எரிவதாக அவருக்கு அவரது நிலத்தின் அருகில் உள்ள விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்ப்பதற்குள் சுமார் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்து இருந்ததுடன், அங்கு ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த தென்னை மற்றும் வாழை பயிர்களும் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. இத்தீவிபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பயிர்கள் எரிந்து சேதமடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆடி திருவிழாவில் பாரி ஊர்வலம்

முழுமையான பணமில்லா சிகிச்சை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்