சங்கராபுரம் அருகேகுடும்ப தகராறில் மைத்துனரைவெட்டிய காவலர் கைது

சங்கராபுரம், ஏப். 12: சங்கராபுரம் அருகே குடும்ப தகராறில் மைத்துனரை அரிவாளால் வெட்டிய காவலரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் யுவராஜ்(32) இவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். பல்வேறு புகார்களால் பின்னர் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்குமுன் யுவராஜ் மற்றும் அவரது மனைவி கல்கி(22) இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் மனைவி கல்கியை வீச்சரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க முயன்ற கல்கியின் சகோதரர் சர்மாவை யுவராஜ் வீச்சரிவாளால் வெட்டினார். இதுசம்மந்தமாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே காவலர் யுவராஜை கைது செய்ய வலியுறுத்தி கல்கியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர் யுவராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில், அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் உத்தரவிட்டார். இந்நிலையில் ேநற்று சங்கராபுரம் அருகே உள்ள ரோடுமாமந்தூர் கிராமத்தில் காவலர் யுவராஜ் பேருந்துக்காக காத்திருந்தபோது போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பியோட முயன்ற அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்