சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி பூசாரி பலி

நெல்லை, ஜன.4: சங்கரன்கோவில் அருகேயுள்ள குருவிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (53). இவருக்கு அங்காள ஈஸ்வரி (50) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பாலசுப்பிரமணியன் அங்குள்ள அம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். மேலும் பூ விற்பனையும் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 31ம்தேதியன்று பாலசுப்பிரமணியன் அங்குள்ள பட்சிதடாகம் குளத்திற்கு பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி அங்காளஈஸ்வரி ஆகியோர் துணி துவைக்க சென்றுள்ளனர். பின்னர் பாலசுப்பிரமணியன் குளத்திற்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளஈஸ்வரி கணவரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக குளத்தில் தேடினர். தகவல் அறிந்து கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பாலசுப்பிரமணியன் உடலை ேதடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் உடலை மீட்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் பாலசுப்பிரமணியன் உடல் குளத்தில் மிதந்தது. குருவிகுளம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை