Friday, July 5, 2024
Home » சகல யோகங்களையும் வழங்கும் திருநள்ளாறு சனி பகவான்

சகல யோகங்களையும் வழங்கும் திருநள்ளாறு சனி பகவான்

by kannappan

பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு  காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தனி சிறப்பு பெற்றது.  சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத்  இது திகழ்கிறது . திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் “ஈசுவர பட்டம்” பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இத்தலம் தர்ப்பாரண்யம் என்றும், பிறகு நகவிடங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டு தற்போது திருநள்ளாறு எனப் போற்றப்படுகிறது. நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத்தலத்தின் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு ஆறுகள் ஓட அதன் நடுவே இத்தலம் இருப்பதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. தல வரலாறு: சூரியனுடைய மனைவி  உஷா.  அவர்  சூரியனின் வெப்பம் தாளாது, அவளது நிழலில் ஒரு பெண்ணை உருவாக்கி அதற்கு சாயாதேவி என்ற பெயருடன் இருந்து வந்தார். இது அறியாமல் அவருடன் சூரியன் உறவாடி பிறந்தவர்தான் சனி பகவான். குழந்தை பிறந்த பின்பு இதை அறிந்த சூரியன் இருவரையும் வெறுத்தார். சனி பகவான் இதன் பின்பு காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு, கிரகங்களின் வழி வந்ததால், நவகிரகத்துக்கு சென்றடைந்தார். நளன் தனது இன்னல்கள் தீர தர்ப்பாரண்யேஸ்வரை தஞ்சம் அடைய இக்கோயிலில் நுழைந்த சமயம் அவரை தொடர்ந்து வந்த சனி பகவான். சிவபெருமான் தன் மீது கோபம் கொள்வாரோ என்று பயந்து, வாசல் படியிலேயே இருந்து விட்டதாக கூறுகின்றனர்.  ஆனால் சிவபெருமான் சனி பகவானின் பாரபட்சம்  இல்லாத சேவையைப் பாராட்டி, அவருக்கு ஈஸ்வர பட்டம் தந்து தன் கோயிலின் நுழைவாயிலேயே இடம் கொடுத்து தங்க வைத்தார். நிடத நாட்டு மன்னன் நளன்,, சேதி நாட்டு இளவரசி தமயந்தி  ஒருவரை ஒருவர் விரும்பி மணம் புரிந்து கொண்டனர். ஆனால் தேவர்கள் தமயந்தியை மணம் புரிய விரும்பினர். ஆகவே இந்த திருமணத்துக்கு பின்பு நளன் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, சனி பகவானை இதற்கு உதவி புரிய வேண்டினர். ஆனால் சனிபகவான், இவர்களது தூய்மையான அன்பை அறிந்து நளனின் உண்மையான அன்பை அவர்களுக்கு உணர்த்த ஏழரை ஆண்டுகளாக பல தொல்லைகள் கொடுத்தும்., மனம் தளராத உறுதியுடன் தர்பாரண்யேஸ்வரரை வந்து அடைந்து சாப விமோசனம் பெற்றார். இதை தேவர்கள் அறிந்து கொள்ளவே கலங்காத உள்ளம் கொண்ட நளனின் பொறுமையையும், தூய காதலையும் வெளிப்படுத்த செய்தார் என்பது வரலாறு. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், அன்னை பிராணேஸ்வரியும் இங்கு அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். திருமாலுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இந்த தலத்து ஈஸ்வரனையும், அன்னையையும் வழிபட மன்மதனை குழந்தையாக பெற்றார். இங்கு நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்த குளங்கள் உள்ளன. சனி தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்திய சாபங்களுக்கு விமோசனம் பெற  பிரம்ம தீர்த்தத்திலும், கல்வி மேன்மை பெற சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி ஈசனை வழிபட பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.சனிபெயர்ச்சி விழா: இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி ஒரு ராசிலியிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்கிறார். சனியை கும்பிட்டால் நாம் கூப்பிட்டவுடன் கனிவோடு வந்து கவலை போக்குவான், கவசம் பாடி வழிபட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பதிகம்பாடி வழிபட்டால் பணத்தேவைகள் பூர்த்தியாகும், துதி பாடல்கள் பாடினால் தொல்லைகள் எல்லாம் அகன்றோடும் என்பது நம்பிக்கை. காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ளது திருநள்ளாறு.   கோயில் காலை 5 மணி முதல்  பகல் 12மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்….

You may also like

Leave a Comment

6 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi