க.ஆடுதுறையில் வி.சி.க., செயற்குழு கூட்டம்

 

பெரம்பலூர்,செப்.30: குன்னம் தாலுக்கா, சு.ஆடுதுறையில் வி.சி.க., வேப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றியசெயலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில பொறுப்பாளர் தங்கதுரை பேசுகையில், ‘‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வி.சி.க., தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிடுவதால் கட்சித் தொண்டர்கள் அனைவரும் தலைவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.

அப்போது சனாதானத்தை முழுமையாக எதிர்ப்பது உள்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் சிதம்பரம் தேர்தல் பணிக்குழு விடுதலை செழியன், அரியலூர், பெரம்பலூர் மண்டல செயலாளர் அன்பானந்தம், மாவட்டச் செயலாளர் (கி) கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், மண்டல துணைச் செயலாளர் லெனின், ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்