கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு பதவி உயர்வு முதல்வருக்கு தொமுச நன்றி

சென்னை : கோ-ஆப்டெக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய முதல்வருக்கு தொமுச சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் எம்.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கடந்த 4-10-2021 அன்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்திற்கும், கோ-ஆப்டெக்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.அதன்படி, ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட முக்கிய நிலையங்களில் வேலை நேரம் இரவு 9 மணியில் இருந்து இரவு 8.30 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 46 விற்பனையாளர்களுக்கு இரண்டாம் நிலை மேலாளராகவும், 6 முதல்நிலை மேலாளர்களுக்கு விற்பனை மேலாளராகவும் பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பதவி உயர்வு வழங்கிய முதல்வருக்கும், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் டி.பி.ராஜேஷ் ஆகியோருக்கும் கோ-ஆப்டெக்ஸ் தொமுச சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்