கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம்

 

கோவை, அக். 13: கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா லோகு தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் கணேசன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய மண்டலம் முழுவதும் குடிநீர் பிரச்னை ஏற்பட துவங்கிவிட்டது.

எனவே, இதை சரிசெய்ய அதிகாரிகள் முழு அளவிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என மண்டல தலைவர் மீனா லோகு கேட்டுக்கொண்டார். மேலும், வீதிகளில் தேங்கும் குப்பைகளை அகற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து, உடனுக்குடன் குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.  இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் பார்த்தீபன், அன்னக்கொடி, வைரமுருகன், பிரதீபா ரவீந்திரன், சுமா, சாந்தி முருகன், ஷர்மிளா சுரேஷ், வித்யா ராமநாதன், முபசீரா, முனியம்மாள், கமலாவதி போஸ், ஜெயப்பிரதா, ரேவதி முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை