கோவை, மதுரையில் நிச்சயமாக மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கோவை மற்றும் மதுரையில் நிச்சயமாக மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2021-22ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ) பேசியதாவது: சட்டப்பேரவையில் முதல் முறையாக நான் பேச தொடங்குகிறேன். முதல் முறையாக பேசுகிறவர்களை கன்னி பேச்சு என்று சொல்கிறார்கள். கன்னி என்ற வார்த்தை இள வயது பெண்ணை குறிக்கும் சொல். அதனால், எனது முதல் பேச்சை அறிமுக பேச்சு என்று சொன்னால் நன்றாக இருக்கும்.சபாநாயகர் அப்பாவு: உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறோம்.வானதி சீனிவாசன்: பொதுவாக உறுப்பினர்கள் பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசுகிறார்கள். நான் முழுவதுமாக பேசிய பிறகு அமைச்சர்கள் பதில் அளிக்க நீங்கள் சொல்ல வேண்டும்.சபாநாயகர்: நீங்கள் பேசும் கருத்துகளை பொறுத்து அமைச்சர்கள் தேவைப்பட்டால், தேவையான விவாதங்களை எடுத்து வைப்பது மரபு.வானதி சீனிவாசன்: கோவை தெற்கு தொகுதி கோவை மாவட்டத்தின் இதயம் போன்றது. எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறபோது, பட்ெஜட்டில் கோவை மெட்ரோ ரயில் பணிகளுக்கு மட்டும் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று கூறியிருக்கிறீர்களே, இது ஏன்?நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: மெட்ரோ ரயில் திட்டம் மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் நடக்கும் திட்டம். எனவே ஆலோசனை கேட்போம். ஏன் வேண்டாம் என்கிறீர்களா?வானதி சீனிவாசன்: இல்லை, கோவை மெட்ரோ ரயிலுக்கு மட்டும் கேட்கிறீர்களே, அதை தான் கேட்கிறோம்.முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் மெட்ரோ ரயில் திட்டத்தை பற்றிக் குறிப்பிட்டு காட்டி, ‘கோவைக்கு மத்திய அரசோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறீர்களே, அது வேதனை அளிக்கிறது என்ற பொருள்பட இங்கே ஒரு கருத்தை சொன்னார். நம்முடைய நிதி அமைச்சரும் அதற்கு விளக்கம் தந்திருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரையில், மத்திய அரசினுடைய உதவியோடு, மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுத்தான் அந்த திட்டத்தை நிறைவேற்றிட முடியும். அப்படித்தான் இதுவரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது என்ற செய்தி எனக்கு கிடைத்திருக்கிறது. உறுப்பினர் கேட்பது போல், நான் ஏற்கனவே டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தபோது, இதுகுறித்து நான் விளக்கமாக சொல்லி இருக்கிறேன், அழுத்தம் கொடுத்து பேசியிருக்கிறேன். அந்த அழுத்தத்தின் அடிப்படையில்தான், அதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. இங்கே உறுப்பினர் சொன்னதுபோல, கோவைக்கும் நிச்சயமாக அழுத்தம் கொடுப்போம். கவலைப்பட வேண்டாம். கோவைக்கு மட்டுமல்ல, மதுரைக்கும் அறிவித்திருக்கிறோம். ஆகையால், எங்கெங்கு அந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டுமோ, அந்தந்த முறையிலே நிச்சயமாக நிறைவேற்றப்படும்.வானதி சீனிவாசன்: கோவையில் இருக்கக்கூடிய மத்திய சிறையை மாற்றி, அங்கு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும்.முதல்வர் மு.க.ஸ்டாலின்: செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்திய போதே, ஏற்கனவே முதல்வர் கலைஞர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 10 ஆண்டு காலம் அவர்கள் அதைப்பற்றி யோசிக்கவில்லை, சிந்திக்கவில்லை. எனவே, உங்களுடைய கோரிக்கை இந்த ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.வானதி: மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் விலங்குகள் மோதலால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். நிதி அமைச்சர்: காடுகளில் நில ஆக்கிரமிப்பு செய்யும்போது தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை