கோவை, பொள்ளாச்சியில் பரபரப்பு பாஜ நிர்வாகி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: இந்து முன்னணி பிரமுகர் கார் எரிப்பு

கோவை: கோவை, பொள்ளாச்சியில் பாஜ நிர்வாகியின் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், இந்து முன்னணி பிரமுகர்களின் ஆட்டோ உடைக்கப்பட்டதும், கார்கள் எரிக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் வி.கே.மேனன் சாலையில் உள்ள பாஜ மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மர்ம நபர்களால் வீசப்பட்ட அந்த குண்டு வெடிக்கவில்லை. மேலும், கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மீதும் மர்ம நபர்கள் பாட்டில் குண்டு வீசினர்.   கோவை ரத்தினபுரி மண்டல் பாஜ தலைவராக இருப்பவர் மோகன். இவர் 100 அடி ரோட்டில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல்  கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது மர்ம நபர்கள் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றது  தெரியவந்தது.நேற்று குனியமுத்தூர் முத்துச்சாமி சேர்வை வீதியில் உள்ள இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகு என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து சென்றுள்ளனர்.  பொள்ளாச்சி குமரன் நகர் பழனியப்பா லே அவுட்டை சேர்ந்தவர் பொன்ராஜ், தெற்கு மாவட்ட பாஜ அமைப்பு சாரா பிரிவு செயலாளராக உள்ளார். இவரது வீட்டு முன்பு நின்ற காரின் கண்ணாடியை கோடாரியால் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அவரது வீட்டு முன்பு டீசல் நிரப்பிய 3 பிளாஸ்டிக் பைகளும் சிதறி கிடந்தன. குமரன்நகரில் வசிக்கும் பாஜ பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த அவரது காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கற்களால்  கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அந்த காரிலும் டீசல் நிரப்பிய பாக்கெட்டுகள் கிடந்தன. கார்களை உடைத்துவிட்டு டீசல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சரவணன்குமார் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்களின் கண்ணாடியையும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் பற்றிய தகவலறிந்த, டிஎஸ்பி தீபசுஜிதா மற்றும் மேற்கு ஸ்டேஷன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை  மேற்கொண்டனர். மேட்டுப்பாளையத்தில் பிளைவுட் கடையிலும், ஈரோட்டில் பர்னிச்சர் கடையிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. …

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது