கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வரும் 26ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 12, பந்தலூரில் 7, கூடலூர், நடுவட்டத்தில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்கிறது. 
மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு