கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கினால் ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: ‘கோவை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கினால் மதரீதிரான ஆபத்தை விளைவிப்பார்கள் என்பதால் எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில், பலர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், ஒரு சிலர் மட்டும் மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை ஆகியுள்ளனர். ஆனால், அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் மட்டும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்டையில் தற்போது வரையில் குற்றவாளிகளாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் உட்பட 5 பேர், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை அடுத்து பட்டியலிடப்படும் போது விசாரிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரும் இப்போதும் தங்களின் பழைய சித்தாந்தத்தில் இருக்கின்றனர். அவர்களின் செயல்பாடுகள் சிறையில் கூட திருப்திகரமாக இல்லை. செல்போன்களை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதிமுறை மீறல்களிலும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், மீண்டும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவார்கள்.  அதனால். அவர்களின் ஜாமீன் மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. …

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை