கோவை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்: நடைப்பயிற்சி சென்றவர்கள் ஓட்டம்

கோவை: கோவை அருகே பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றபோது யானை கூட்டம் ஊருக்குள் புகுந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பூச்சியூர் அருகே கிரீன் கார்டன் பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை 6 மணி அளவில் அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள குருடி மலை அடிவார வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்து ஓடி பக்கத்திலிருந்த வீடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.யானைக் கூட்டம் வீடுகளுக்கு முன்பாக இருந்த வாழை மரங்களை சாப்பிட்டு சேதப்படுத்திவிட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து  அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யாரும் வெளியே வராததால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது….

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்