கோவையில் யுபிஎஸ்சி நர்சிங் அதிகாரி தேர்வு: 2,716 பேர் பங்கேற்பு

 

கோவை, ஜூலை 8: நாடு முழுவதும் யுபிஎஸ்சி, இ.எஸ்.ஐ.சி ஆட்சேர்ப்பு இயக்கம் துறையில் காலியாக உள்ள 1,930 நர்சிங் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி, ஆர்.வி.எஸ் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி உள்பட மொத்தம் 8 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 3,530 பேர் எழுத இருந்தனர்.

இந்நிலையில், தேர்வினை 2,716 பேர் எழுதினர். 814 பேர் தேர்வு எழுதவில்லை. மேலும், யுபிஎஸ்சி இபிஎப்ஓ உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு பி.எஸ்.ஜி கல்லூரி மற்றும் சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் நடந்தது. இந்த தேர்வினை 771 பேர் எழுத இருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த தேர்வினை 211 பேர் மட்டுமே எழுதினர். 560 பேர் எழுதவில்லை. அதாவது 27.37 சதவீதம் பேர் மட்டுமே தேர்வினை எழுதியுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை