கோவையில் மழை வேண்டி யானை வைத்து கஜபூஜை

 

கோவை, மார்ச் 11: கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் ஹாலில் பஞ்ச பிரம்ம விஸ்வ சித்தி மகா யாகம் நேற்று நடந்தது. விஸ்வகர்மா மக்கள் சார்பில் நடந்த யாக பூஜைக்கு குளோபல் பவுண்டேஷன் மாநில தலைவர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், உலக மக்கள் நலன் வேண்டியும், பாரதம் செழிக்கவும், மழை வேண்டியும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதில், யானை வைத்து கஜபூஜையும், பசுகளை வைத்து கோமாதா பூஜையும், சங்கு பூஜையும், அஸ்வமேத யாகங்களும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், பாஜ விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், ஊடக மாநில துணை தலைவர் சபரிகிரீஸ், காமாட்சியம்மன் கோயில் சார்பில் எம்.பி.பாண்டியன், ராஜமோகன், ரத்தினம், மலுமிச்சம்பட்டி நாகசக்தி பீடம் பாபுஜி சுவாமிகள், அர்ஜூன் சம்பத் மற்றும் விஸ்வகர்மா துறவிகள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து