கோவையில் பலத்த மழை

 

கோவை, அக்.8: தமிழகத்தில் கோவை, ஈரோடு, தேனி, விருதுநகர், திண்டுகல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெயும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோவையில் நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து நேற்று மாலை 7 மணி அளவில் கோவை காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், கணபதி, கவுண்டம்பாளையம், சாய்பாபாகாலனி, பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அவிநாசி சாலை, லங்கா கார்னர், வடகோவை ரயில்வே பாலம் கீழ்பகுதி ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்