கோவையில் பட்டா மாறுதல் செய்ய மோசடி

 

கோவை, ஜூன் 27: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட நகர நில அளவை பதிவேடு துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார் (39). இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார் மனுவில், ‘‘தான் பணியாற்றும் அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளர் ஐடி மற்றும் கடவு சொல்லை எங்களின் அனுமதி இன்றி அதை எடுத்து அந்த விவரங்களை நாங்கள் பயன்படுத்துவது போல் காட்டி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றும் நோக்கத்தில் பட்டா மாறுதல் அப்ரூவல் செய்வதும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதும் பின்னர் பட்டா மாறுதல் செய்து வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. எங்கள் அலுவலகத்தின் பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி பட்டா மாறுதல் பரிந்துரை வழங்கிய நபர்களை கண்டறிந்து சட்டப்படியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி