கோவையில் அனல் பறக்கும் தேர்தல் களத்தில் அயல்நாட்டவர் வாக்கு சேகரிப்பு!: திமுக கொடியுடன் புல்லட்டிலும், பேருந்திலும் சென்று பரப்புரை..!!

கோவை: கோவையில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் பற்றி அறிந்து வியந்த ருமேனியா நாட்டை சேர்ந்த ஒருவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டெபன் என்பவர் பணி நிமித்தமாக தமிழ்நாடு வந்திருக்கிறார். கோவையில் பேருந்தில் செல்லும் போது பெண்கள் பயணசீட்டு வாங்காததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தனது நண்பரான மருத்துவர் கோகுல் என்பவரிடம் செல்பேசி மூலம் கேட்டிருக்கிறார். அப்போது திமுக அரசின் திட்டம் பற்றி அவர் விளக்க ஸ்டெபன் ஆச்சர்யத்தில் மூழ்கி போனார். உலகில் வேறு எங்கும் பார்க்காத திட்டத்தை அமல்படுத்திய திமுகவுக்கு ஆதரவாக உள்ளாட்சி தேர்தலில் ஸ்டெபன் பிரச்சாரம் செய்து வருகிறார். உதய சூரியன் சின்னம், ஸ்டாலின் படத்துடன் களமிறங்கியிருக்கும் அவர் திமுக தொண்டர் போலவே வாக்கு சேகரித்து வருகிறார். இதை கோவை மக்கள் ஆச்சர்யத்துடன் ரசித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் பேசுகையில், நான் பேருந்தில் பயணம் செய்தபோது, பெண்கள் யாரும் டிக்கெட் எடுக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்ததால், இதுகுறித்து எனது நண்பர் கோகுலிடம் கேட்டறிந்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த மகளிருக்கான திட்டங்கள் குறித்து அவர் விளக்கினார் என்று கூறினார். …

Related posts

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவு

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

உரிமையாளர்களின் அலட்சியத்தால் திருவள்ளூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்து