கோவையில் அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதி அரசு பேருந்து கவிழ்ந்து: 7 பேர் படுகாயம்

கோவை: கோவையில் அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செல்லும் அரசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை சிறுமுகையில் இருந்து கிளம்பியது. அப்போது சிறுமுகை பகுதி வளைவு ஒன்றில் அதிவேகமாக திரும்பிய சரக்கு லாரி, அரசு பேருந்தின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதனால் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையை இடித்துக்கொண்டு பக்கவாட்டில் கவிழ்ந்தது. மனதை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சிறுகாயங்களுடன் தப்பிய 7 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து இந்த விபத்து தொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

Related posts

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் சோதனை