கோவைக்கு வந்த ஒன்றிய ஜவுளி அமைச்சரிடம் திமுக மனு

 

கோவை, செப். 2: கோவைக்கு நேற்று முன்தினம் வந்த ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம், தேசிய பஞ்சாலை கழக தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பணியாளர்கள் முன்னேற்ற சங்க (எல்பிஎப்) பொதுச்செயலாளர் சு.பார்த்தசாரதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசுக்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகத்திற்கு உட்பட்ட என்டிசி ஆலைகள் நாடு முழுவதும் மொத்தம் 23 உள்ளன. இவை, கடந்த 24.3.2020 முதல் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக மூடப்பட்டன.

கடந்த 40 மாதங்களாக இந்த ஆலைகள் இயங்காமல் மூடிக்கிடக்கின்றன. அன்று முதல் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் பெரும் துயரத்தில் தவிக்கிறார்கள். எனவே, என்டிசி ஆலைகளை மீண்டும் இயக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் எப்போதும்போல் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதே கோரிக்கை மனுவை, ஒன்றிய இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், ஒன்றிய ஜவுளித்துறை ஆணையர் ரூப்ராஷி ஆகியோரிடமும் அளித்துள்ளார். அப்போது, தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், சைமா தலைவர் ரவி சாம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related posts

ஆலஞ்சோலை அருகே மலைப்பாம்பு சிக்கியது

அருணாச்சலா கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

மார்த்தாண்டம் அருகே பிளஸ் 1 மாணவி திடீர் மாயம்