கோவிட் வாரியர்ஸ் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்க வழக்கு: அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவு

மதுரை: கோவிட் வாரியர்ஸ் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்கக் கோரிய வழக்கில் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, முனிச்சாலையைச் சேர்ந்த பிஸ்வஜித், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் தந்தை டாக்டர் தியானேஷ். கொரோனாவுக்கு எதிரான போரில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். பலரது உயிரை காப்பாற்றினார். ஆனால், அவரும் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்தாண்டு ஜூலை 12ல் இறந்தார். என்னை மருத்துவராக்க வேண்டும் என்பது தான் என் தந்தையின் ஆசை. இதனால் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்று 200 மதிப்பெண்கள் பெற்றேன். கொரோனா பணியில் ஈடுபட்டு பலியாகும் மருத்துவ பணியாளர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் கோவிட் வாரியர்ஸ் ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.இதன்படி, ஒன்றிய அரசின் கோவிட் வாரியர்ஸ் ஒதுக்கீட்டின் கீழ் ஏதாவது ஒரு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கக் கோரியிருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, கோவிட் வாரியர்ஸ் ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவக்கல்லூரியில் எனக்கு சீட் ஒதுக்கித் தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார்.உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘மனுதாரர் கோரிக்கை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா வாரியர்ஸ் ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் 5 இடம் மட்டுமே ஒதுக்கப்படும். எந்த கல்லூரியில் இடம் ஒதுக்கினாலும் அங்கு ேபாய் சேர ேவண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, இந்த நீதிமன்றம் மனுதாரரை வாழ்த்துகிறது. அவரது கனவு மட்டுமின்றி, அவரது தந்தையின் கனவும் நிறைவேறும் என நம்புகிறேன். மனுதாரரின் கோரிக்கைக்கு பதிலளித்தவர்கள், உண்மையில் அவரது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி மனுவை முடித்து வைத்தார்….

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் கைது..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 15 பேர் மீது குண்டாஸ்!