கோலார் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் குவிந்துள்ள குப்பை, கழிவுகள்

கோலார்:  கோலார் நகரசபை 27 சதுர கி.மீட்டர் சுற்றளவில் உள்ளது. நகரில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்கிறார்கள். 35 வார்டுகள் கொண்டுள்ள நகரசபையில் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ற துப்புரவு தொழிலாளர்கள் இல்லாததால், தூய்மை பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரசபைக்கு துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 418 ஊழியர்கள் நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே தற்ேபாது பணியில் உள்ளனர். நகரசபையில் தினக்கூலி மற்றும் குத்தகை அடிப்படையில் சில ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பிறப்பு-இறப்பு பதிவு பிரிவில் 8 ஆண்டுகளாக ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது. ஊழியர்கள் நியமனம் செய்யும்படி நகரசபை ஆணையர் பலமுறை உள்ளாட்சி துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியும் இன்னும் நியமனம் செய்யவில்லை. குறிப்பாக துப்புரவு தொழிலாளர்கள் குறைப்பாடு உள்ளதால், நகரில் பல இடங்களில் குப்பை, கழிவு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.கோலார் நகரில் தினமும் 80 டன் கழிவுகள் ேசமிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் 120 டன் அளவுக்கு கழிவுகள் சேமிக்கப்படுகிறது. கழிவு  மேன்ஹோள் சுத்தம் செய்வது, கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொறுப்பு துப்புரவு தொழிலாளர்கள் தலையில் விழுந்துள்ளது. நகரசபை விதிமுறைகள் படி 700 பேருக்கு ஒரு துப்புரவு தொழிலாளி இருக்க வேண்டும்.  அதன்படி 2 லட்சம் மக்கள் தொகைக்கு 286 துப்புரவு தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 54 நிரந்தரம் மற்றும் 95 பேர் குத்தகை, 31 பேர் தினக்கூலி என துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர். நகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 6 பேர் உள்ளனர். இன்னும் 100 துப்புரவு தொழிலாளர் பணியிடம் காலியாகவுள்ளது. இதனால் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் குப்பை கழிவுகள் அகற்றாமல் குவிந்துள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், நகரம் தூய்மை இல்லாமல் இருப்பது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை