கோலடிக்க திணறும் சென்னையின் எப்சி: அரையிறுதிக்கு முன்னேறுமா?

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை அணி தொடர்ந்து கோலடிப்பதில் திணறி வருவதால் அந்த அணியின் வெற்றியும், அரையிறுதி வாய்ப்பும் கேள்வி குறியாகி உள்ளன. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 7வது  தொடர் கோவாவில் நடந்து வருகிறது. மொத்தம் 11 அணிகள் விளையாடும் இந்தத் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2முறை என மொத்தம் 20 ஆட்டங்களில் விளையாட வேண்டும். இப்போது பல அணிகள் 15, 16 ஆட்டங்களில் விளையாடி முடித்து உள்ளன. புள்ளிப் பட்டியலில் ஐதராபாத், கேரளா, பெங்களூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.சென்னையின் எப்சி அணி இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடி  5 வெற்றி, 4 டிரா, 6தோல்வி என 19 வெற்றிப் புள்ளிகளுடன் 7 வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 5 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் சென்னை தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கூடவே  மற்ற அணிகளின்  வெற்றி, தோல்விகள் சென்னையின் அரையிறுதியை கேள்வி குறியாக்கலாம். காரணம் இந்த தொடரில் குறைவான கோலடித்த அணியாக சென்னை அணி உள்ளது. அந்த அணி 15 ஆட்டங்களில் ஆடி, 14 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது.  புள்ளிப் பட்டியலில் அதற்கு கீழ்  உள்ள 4அணிகளும்  அதிக கோல்கள் அடித்துள்ளன. சென்னைக்கு எதிராக 20 கோல்கள் விழுந்துள்ளன. இரண்டு அணிகள் ஒரே வெற்றிப் புள்ளிகள் பெறும் போது அடித்த, வாங்கிய கோல்களின் வித்தியாசங்கள், பட்டியலில் எந்த இடம் என்பதை முடிவு செய்யும். எனவே எஞ்சிய ஆட்டங்களிலாவது நிறைய கோலடிப்பது வித்தியாசத்தை குறைக்க உதவுவதுடன், வெற்றி வாய்ப்புகளையும் சென்னைக்கு அதிகரிக்கலாம். இல்லாவிட்டால் சென்னை லீக் சுற்றுடன் வெளியேற வேண்டியதுதான்.எந்த அணி? எத்தனை கோல்?*அணி    அடித்த கோல்    வாங்கிய கோல்    கோல் வித்தியாசம் ஐதராபாத்    33    13    +20 கேரளா    20    12    +8 பெங்களூர்    27    20    +7 ஜாம்ஷெட்பூர்    20    15    +5 மும்பை    25    22    +3 ஏடிகே    24    20    +4 சென்னை    14    20    -6 ஒடிஷா    23    28    -5 கோவா    18    24    -6 பெங்கால்    16    30    -14 நார்த்ஈஸ்ட்    19    35    -16 * சென்னையின் எப்சி- மும்பை சிட்டி எப்சி ஆட்டம் வரை…

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம்