கோரிக்கை மனுக்களை மூங்கில் கூடையில் சுமந்து வந்து வேட்பு மனுதாக்கல்

சென்னை: செங்கல்பட்டு நகராட்சி 1வது வார்டில்  ருத்ரகுமார் என்ற இளம் வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில்,  கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கைகளை மூங்கில் கூடையில் வைத்து தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலமாக சென்றவர், செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் வரை நடந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். இளம் சுயேச்சை வேட்பாளர் ருத்ரகுமார் கூறுகையில்,  ‘‘எங்கள் பகுதியில் 10 ஆண்டுகளாக எந்தவித திட்டங்களையும் எந்த வார்டு உறுப்பினரும் நிறைவேற்றவில்லை. அதனால் அத்தனை கோரிக்கைகளையும் என் தோளில் சுமந்தபடி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். 1வது வார்டில் நான் வெற்றி பெற்றால் தோளில் சுமந்து வந்த, இந்த கோரிக்கைகளை தீர்த்து வைப்பேன்.  எனது வார்டு மக்களுக்கும் நிறைவேறாத கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்திற்கு உணர்த்துவதற்காகவும் கோரிக்கைகளை தோளில் சுமந்தபடி வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தேன் என்றார்….

Related posts

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு