கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய வருவாய் துறை அலுவலர்கள்

 

திருவள்ளூர்: கடந்த 9ம் தேதி திருச்சிராப்பள்ளி மாநகரில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஊழியர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில், திருவள்ளூரில் வருவாய் துறை அலுவலர்கள், கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.

பட்டதாரி அல்லாதோர் பணியிறக்க பாதிப்பினை களைந்திட விதித்திருத்த அரசாணையை வெளியிட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை செயல்படுத்திட கோட்ட, வட்ட அளவில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுதிய அட்டைகளை அணிந்து பணி செய்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை