கோயில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கவும் அறிவுரை பூஜை நடத்துவதாக கூறி பக்தர்களிடம் நன்கொடை வசூலிப்பதாக புகார்: அலுவலர்கள் கண்காணிக்க அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கோயிலில் பூஜைகள்  நடத்துவதாக கூறி பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், கோயில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கவும், கண்காணிக்கவும் கோயில் அலுவலர்களுக்கு  அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் அனைத்து இணை ஆணையர், உதவி ஆணையர்கள் எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பிரசித்த பெற்ற கோயில்களில் மட்டுமே அபிஷேகம் மற்றும் இதர பூஜைகளுக்கான கட்டணங்கள் குறித்த விவரங்கள் அறிவிப்பு பலகைகளாக வைக்கப்பட்டிருக்கின்றன எனவும், மற்ற கோயில்களில் பூஜைகளுக்கான கட்டணங்கள் குறித்த விவரங்கள் அறிவிப்பு பலகைகளளாக கோயில் வளாகத்தில் வைக்கப்படவில்லை எனவும், அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தாலும், சில அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் பக்தர்களிடம் தனித்தனியாக அபிஷேகத்திற்கு பொருட்களையும் மற்றும் சிலரிடம் பணமாகவும் பெறுகிறார்கள் எனவும் சமய நிறுவனங்கள் மற்றும் கைங்கரிய சபாக்கள் தாங்கள் தான் அபிஷேக பூஜைகளை ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி பக்தர்களிடம் நன்கொடை பெறுகிறார்கள் என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே, இனி வருங்காலங்களில் இது போன்ற புகார்களுக்கு இடமளிக்காவண்ணம் தங்கள் சரத்தில் உள்ள இத்துறை ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் நடைமுறையில் உள்ள அபிஷேகம் மற்றும் இதர பூஜைகளுக்கான கட்டணங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை வைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது குறித்து தத்தமது நிர்வாகத்திற்குட்பட்ட கோயில் செயல் அலுவலர்கள், தக்கார்கள், பரம்பரை அறங்காவலர்கள், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கிடவும், இதனை முழுமையாக செயல்படுத்துவதை கண்காணித்து உரிய தொடர் நடவடிக்கை எடுக்கவும் இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அபிஷேக பூஜைகளை ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி பக்தர்களிடம் நன்கொடை பெறுகிறார்கள் என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை