கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை, ஜூன் 24: சிவகங்கை அருகே பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழா, மொழிப்போர் தியாகி நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரியமாட்டிற்கு 8 மைல் தூரமும், நடு மாடு பிரிவிற்கு 7 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டது.

பெரியமாட்டுப் பிரிவில் 7 ஜோடி மாடுகளும், நடு மாடு பிரிவிற்கு 16 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 20 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. திமுக பொது குழு உறுப்பினர் பிடிஆர் முத்து தலைமை வகித்தார். போட்டியினை முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

போட்டி துவங்கியவுடன் மாடுகள் சீரிப்பாய்ந்து ஒன்றை ஒன்று முன்னேறி சென்றன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தினை மதகுபட்டி, பாகனேரி, ராமலிங்கபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்த பார்வையாளர்கள் சாலையின் இருபுறங்களில் இருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர். போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு