கோயில் திருவிழாவையொட்டி மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி: நத்தம் அருகே நடந்தது

நத்தம்: கோயில் திருவிழாவையொட்டி, நத்தம் அருகே செந்துறையில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை பெரியூர்பட்டியில் மந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவையொட்டி  பக்தர்கள்  கடந்த 5ம் தேதி காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து 8 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா முக்கிய நிகழ்ச்சியாக நேற்று  மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 96 கிராமங்கள் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள் வளர்க்கும் சாமி மாடுகள் கலந்து கொண்டது.  இந்த மாடுகளை கோயில் முன்பு  நிறுத்தி வைத்து முறைப்படி விசேஷ பூஜைகள் செய்தனர். பின்னர் பக்தர்கள் காலணியின்றி, கரடு முரடான பாதைகளில் சுமார் 1கிமீ தூரம்   மாடுகளுடன் ஓடி வந்து, கோயில் முன் போட்டிருந்த வெள்ளை துணியை மாடுகளை தாண்ட செய்தனர். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே