கோயில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

போச்சம்பள்ளி, ஜூன் 1: போச்சம்பள்ளி அருகில் உள்ள பாரண்டப்பள்ளியில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. முதல் நாள் ஊரம்மா அனுப்புதல், 2ம்நாள் பெருமாளப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து வந்த நாட்களில் விநாயகருக்கு மாவிளக்கு, சிறப்பு பூஜையும், பம்பை மேளத்துடன் முத்து மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மறுநாள் திரளான பெண்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். விழாவில் 6ம் நாள் அலங்கரிக்கப்பட்ட குதிரைவண்டி ஊர்வலம், கேரளா செண்ட மேளத்துடன் மாவிளக்கு எடுத்து செல்லியம்மன் சிறப்பு பூஜை செய்தனர். மறுநாள் கரகம் தலை கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு