கோயில் எண்ணிக்கைக்கு ஏற்ப செயல் அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை

சென்னை: கோயில் எண்ணிக்கைக்கு ஏற்ப செயல் அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் 2 நாட்கள் நடந்தது. இதில் 400 செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக சுரேஷ்குமார், பொது செயலாளராக ஜெயப்பிரகாஷ் நாராயணன், மாநில பொருளாளராக எஸ். முத்துராஜ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில், உதவி ஆணையர் பதவி உயர்வில் 50 சதவீதம் செயல் அலுவலர்கள், 30 சதவீதம் அமைச்சு பணிளாளர்கள், 20 சதவீதம் நேரடி நியமனம் மூலம் செய்ய வேண்டும், செயல் அலுவலர் பணியிடத்திற்கு 2:2:1 என்பதற்கு பதில் 3:1:1 என மாற்ற வேண்டும், நிதி வசதி அற்ற கோயில்களில் கோயில் அலுவலகங்கள் கட்ட வேண்டும், வருமானத்திற்கு ஏற்ப கோயில்களின் நிலையை உயர்த்த வேண்டும், கோயில்களில் பணியாளர் தொகுதி அமைக்க வேண்டும், செயல் அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை