கோயில்களுக்கு சொந்தமான நில ஆவணங்களை தொகுத்து சான்று அளிக்க வேண்டும்: அதிகாரி உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட உதவி ஆணையர் கவெனிதா அனைத்து செயல் அலுவலர்களுக்கும், அனைத்து ஆய்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வருவாய்த்துறை தமிழ் நில பதிவுகளோடு சென்னை உதவி ஆணையர் பிரிவிற்குட்பட்ட பட்டியலைச் சாராத 500 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்களை ஒப்பீடு செய்து அதில் முழுமையாக ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள். புதிய இனங்கள் ஆகிய விவரங்களை இத்துறை இணைய முகப்பிலிருந்து நில ஆவணங்களை எடுத்து சரிபார்த்து அவற்றைத் தொகுத்து கோயில் அறங்காவலர்/நிர்வாகி செயல் அலுவலர், உதவி ஆணையர் ஆகியோரின் சான்று அளித்து கையொப்பமிட்டு உயர் நீதிமன்றத்தில் பதிலுறை தாக்கல் செய்திடும் பொருட்டு இது தொடர்பான முழுமையான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தவறும் செயல் அலுவலர்கள்/ஆய்வர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஆணையர் தொடர்ந்து சீராய்வு செய்து வருவதாலும், உயர்நீதிமன்ற வழக்கு என்பதாலும், அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும்.   பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட கோயில்களின் விவரம் (பட்டியலில் சார்ந்தது மற்றும் பட்டியலில் சாராதது) ஆய்வர் சரகம் வாரியாக சமர்ப்பிக்க வேண்டும். சென்னை உதவி ஆணையர் பிரிவில் உள்ள ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் செயல்படும் 134 கோயில்களில் சட்டமன்ற விதி 110ன் படி, 100 கோயில்களுக்கு சென்னை உதவி ஆணையர் பிரிவில் மாத ஊக்கத்தொகை பெற்று வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 கோயில்களில் உரிய விவரங்கள் சமர்ப்பிக்காததால் நாளது தேதி வரை நிலுவையிலுள்ளது. எனவே ஆய்வாளர்கள். செயல் அலுவலர்கள்/ அறங்காவலர்கள்/ நிர்வாகிகளிடமிருந்து உரிய விவரங்களுடன் ஊக்கத்தொகை பெற தகுதி இருப்பின் அதன் விவரம், ஊக்கத்தொகை தேவை இல்லை எனில் அதன் விவரம் அறிக்கையாக அனுப்ப வேண்டும். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை