கோயில்களில் புதுப்பொலிவு பெறும் கோசாலை : மின் விசிறியில் இளைப்பாறும் பசுக்கள்

நெல்லை: அறநிலையத்துறை கோயில்களில் பராமரிப்பு இன்றி காணப்பட்டு வந்த பசுக்கள் பாதுகாப்பு மையங்களான கோசாலைகளை தற்போது தூய்மைப் படுத்தி சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் வகையில் கோ சாலைகளில் பசுக்கள் மின்விசிறியில் இளைப்பாறும் வகையில் புதுப்பொலிவு பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில்களுக்கு பக்தர்கள் தானமாக வழங்கப்படும் பசுக்களை பாதுகாக்க கோசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோசாலைகள் கடந்த ஆட்சிக்காலத்தில் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் கோசாலைகளில் பசுக்களை முறையாக பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருக்கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, கடைகள், கட்டிடங்களில் வாடகை, நன்செய், புன்செய் விளை நிலங்களின் குத்தகை பாக்கி வசூல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடி்க்கைகளை எடுத்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய 121 கோயில்களின் கோசாலைகளை முறையாகப் பராமரித்து பாதுகாக்கவும், பசுக்கள் கூடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து மேம்படுத்த ரூ.20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கோயில்பதாகை சுந்தராஜபெருமாள் கோயிலில் 25 ஏக்கரில் கோசாலை விரிவாக்கம், திருச்சி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நவீன வசதிகளுடன் கூடிய கோசாலைகள் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுபோல் பழநி, திருச்செந்தூர்,  ரங்கம், ராமேஸ்வரம் கோயில்களுக்கு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்கள், காளைகள், கன்றுக்குட்டிகள் பராமரித்து பாதுகாக்க ஒருங்கிணைந்த கோசலைகள் செயல்படுகின்றன. பிற கோசாலைகளில் உள்ள உபரியாக உள்ள பசுக்களை ஒருங்கிணைந்த கோசாலைகளில் வழங்கி பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் உள்ள கோசாலையானது பசுக்களை பாதுகாத்து பராமரிக்கும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. கோசாலைகளில் பக்தர்கள் நேர்த்தி கடனாகவும,் தானமாகவும் வழங்கப்படும் பசுக்கள், காளைகள், கன்றுகுட்டிகளுக்கும் பக்தர்கள் சத்துள்ள உணவுகளான அகத்தி கீரை, வாழைபழம், பருத்திகொட்டை, புண்ணாக்கு, பயறு வகைகள் தானமாக வழங்கி வருகின்றனர். மேலும் கோயில் நிலங்களில் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களின் கழிவு வைக்கோல்களும் பசுக்களுக்கு வழங்கி பாதுகாக்கப்படுகிறது.இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில் ‘‘நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சங்கிலி மண்டபத்தின் அருகே கோசாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோசாலையில் 8 பசுக்கள், 4 காளைகள், 5 கன்றுகுட்டிகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோசாலையில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு கூலிங் மெட்டல் சீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெயில் காலத்திலும், இரவு நேரங்களில் கொசு தொல்லையால் பசுக்கள் அவதிபடாத வகையில் மின் விசிறிகள், மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பசுக்களை குளிப்பாட்ட மின்மோட்டார் வசதிகள், பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் வைக்கோல், புண்ணாக்கும் பசுக்களுக்கு தீவனம் வழங்கப்படுகின்றன. கோசாலையில் உள்ள பசுக்கள் மூலம் கிடைக்கப்பெறும் பால் சுவாமி, அம்பாள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தற்போது கோசாலையில் உள்ள பசுக்கள், கன்றுகள், காளைகள் பராமரித்து பாதுகாப்படுகின்றன’’ என்றார்.இதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கோசாலைகளில் உள்ள பசுக்கள், காளைகள், கன்றுகுட்டிகளை பாதுகாக்கவும், பசுக்கூடங்களில் மின்விளக்குகள், மின்விசிறிகள், கொசு விரட்டிகள் வைத்து பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இத்தகைய தமிழக அரசின் கோசாலை பசுக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் உத்தரபிரதேசம் பாணியில் தமிழக அரசு பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.உழவாரப் பணியில் வடமாநில பெண்கள்நெல்லையப்பர் கோயிலில் சங்கிலி மண்டம், பொற்றாமரை குளத்தின் அருகில் கோசாலை அமைந்துள்ளது. இங்கு பசுக்கள், காளைகள், கன்றுகுட்டிகள் என பக்தர்கள் தானமாக வழங்கிய 17 மாடுகள் உள்ளன. இவைகள் பகல் நேரத்தில் பசுக்கூடத்தை விட்டு வெளிபகுதியில் மரத்தடியில் கட்டி வைக்கப்படுகின்றன. அப்போது வைக்கோல், அகத்தி கீரை, புற்கட்டுகள் மாடுகளுக்கு பக்தர்கள் வாங்கி தீவனமாக கொடுக்கின்றனர். அவ்வாறு கொடுக்கப்படும் தீவனங்கள் பசுக்கள் தின்றுவிட்டு மீதியை அப்படியே விட்டுவிடுவதால் அவைகள் பசுக்கூடத்தின் அருகில் குப்பைகூளமாக காட்சியளிக்கின்றன. இவைகளை நெல்லை டவுனில் உள்ள வடமாநில 4 பெண்கள் தினமும் காலை மற்றும் மாலையில் கூட்டி பெருக்கி சுத்தம் செய்கின்றனர். இதனால் அவர்கள் மனதுக்கு நிறைவு ஏற்படுவதாகவும், லட்சுமி ேதவிக்கு செய்யும் தொண்டாக கருகின்றனர்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை