கோயிலுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் த கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும், நகைகள் உள்ளிட்ட சொத்துகளும் உள்ளன. ஆனால், இவற்றை சட்டவிரோதமாக சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் பொன்னாண்டாம்பாளையத்தில் உள்ள கணேசர் கோயில், கன்னியூரில் உள்ள தண்டபாணி கோயில் உள்ளிட்ட 7 கோயில்களின் சொத்துகளும் வருமானமும் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வரும் வருமானம் பூஜைகள், விழாக்கள் நடத்தவும், கோயில் பராமரிப்பிற்கும் செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான கோயில்களின் வருமானங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு வருகிறது.கடந்த 1985-1987ம் ஆண்டைய இந்து சமய அறநிலையத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு 5.25 லட்சம் ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2018-19 மற்றும் 2019-20 கொள்கை விளக்க குறிப்பில் 4.78 லட்சம் நிலம்தான் கோயில்களுக்கு சொத்தாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்து இந்து சமய அறநிலைத்துறையிடம் எந்த விளக்கமும் இல்லை. அந்த நிலத்தை மீட்பதற்கு அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவை கோயில்கள் குறித்தும், அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 ஆயிரம் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க கோரியும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவை பொன்னாண்டாம்பாளையம் கோயில் உள்ளிட்ட 7 கோயில்களின் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை