கோயம்பேடு முதல் வடபழனி வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள 100 அடி சாலையில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், சோதனை ஓட்டமாக நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடபழனி 100 அடி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளதால், போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டு, நாளை முதல் 10 நாட்கள் சோதனை ஓட்டமாக கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. * கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் உள்ள மைய தடுப்புசுவர் மூடப்பட்டு இதற்கு மாற்றாக, ஏற்கனவே உள்ள 2 ‘யூ’ திருப்பங்கள் வடபழனி பாலத்தின் கீழ் ‘யூ’ திருப்பத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் தற்போது புதிதாக 2 ‘யூ’ திருப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.* விநாயகபுரம் சந்திப்பிற்கும்,  பெரியார்பாதை சந்திப்பிற்கும் இடையே அரும்பாக்கம் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் உள்ள ‘யூ’ திருப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. * பெரியார் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண்கள் எண் 126 மற்றும் 127 அமைந்துள்ள இடையில் ‘யூ’ திருப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.இதனால் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.  * வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திருப்பம் செய்ய விரும்புபவர்கள் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையில் புதியதாக அமைந்துள்ள ‘யூ’ திருப்பத்தில் திருப்பி செல்லலாம்.* வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார் பாதை சந்திப்பில் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள ‘யூ’ திருப்பத்தில் திரும்பிக் கொள்ளலாம். * விநாயகபுரம் சந்திப்பில் எம்எம்டிஏ காலனி வலதுபுறம் திரும்பி செல்ல விரும்பும் வாகனங்கள் 496 மீட்டர் தொலைவில் உள்ள கேம் வில்லேஜி ‘யூ’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம். * கோயம்பேடு பகுதியில் இருந்து வடபழனி நோக்கி வரும் வாகனங்கள் விநாயகபுரம் சந்திப்பை தாண்டி 243 மீட்டர் தொலைவில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ ரயில்நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘யூ’ திருப்பத்தில் திரும்பி விநாயகபுரம் நோக்கிச் செல்லலாம். * பெரியார் சந்திப்பு மூடப்படுவதால் பெரியார் பாதை உள்ளிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி செல்லவும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் 240 மீட்டர் தொலைவில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘யூ’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம். * கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் 199 மீட்டர் தூரம் சென்று ‘யூ’ திருப்பம் எடுத்து செல்லலாம். * நெற்குன்றம் பாதையில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி வடபழனி பாலத்தின் கீழ் உள்ள ‘யூ’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை