கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம் போல் செயல்படும்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம்போல் செயல்படும் என கோயம்பேடு வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இச்சமயத்தில் மக்களுக்கு காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் சீராக கிடைப்பதற்கு தமிழக அரசு சார்பில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களின் விற்பனை நடைபெற்று வருகிறது.இதுகுறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகளின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறுகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழக அரசு அறிவித்த கொரோனா தடுப்பு விதிகளை நாங்கள் முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இதையடுத்து, சென்னை நகரில் காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த, கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்தார்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை