கோயம்பேடு மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கடைகளால் நிரம்பி உள்ளது.  இதனால் முறையாக வியாபாரம் செய்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அப்படிப்பட்ட கடைகளின் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி பறிமுதல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என அனைத்து வியாபாரிகளின் சங்கங்கள் இணைந்து முதன்மை நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து, நேற்று முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தி தலைமையில் கொண்ட அதிகாரிகள், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறியப்பட்டு. பின்னர் அந்த கடைகளுக்கு சுமார் ரூ.45,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தி கூறுகையில், `கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் நிரம்பி உள்ளதாகவும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று நேற்று சுமார் 70க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியுள்ளோம். மீதியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவதற்கான பணிகள் தொடரும். மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் போட்டு வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு