கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி: மாநகராட்சி ஏற்பாடு

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி சார்பில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர், பயணிகள் என அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை மற்றும் கோவிட் 19  தடுப்பூசி போடும் பணி  நேற்று  முன்தினம் தொடங்கியது.  சென்னையில் இரண்டாம் கட்டமாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், இதனை  தடுக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் வெளியூரில் இருந்து சென்னை வரும் பயணிகள் மற்றும்  வெளியூருக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், அரசு பேருந்து ஓட்டுனர், நடந்துனர், வியாபாரிகள், பயணிகள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்த பணிகளில், சென்னை மாநகராட்சி 10வது மண்டல துப்புரவு அலுவலர்  கோபாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தலைமையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு  பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை