கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் தடவிய 200 கிலோ மலை வாழை பழங்கள் பறிமுதல்

சென்னை: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் வாழைப்பழத்தில் ரசாயனம் கலந்து பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக அங்காடி நிர்வாகத்துக்கு, ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில் 3 குழு அமைக்கப்பட்டது. இதில், கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் குழு கொரோனா விதிமுறைகளை பற்றியும், இரண்டாவது குழு பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு குறித்தும், மூன்றாவது குழு பழ மார்க்கெட்டில் ரசாயனம் தெளித்து பழங்களை  பழுக்க வைக்கப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 3 குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் மலை வாழை பழங்களுக்கு  ரசாயனம் தடவிக் கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதில் சுமார் 200 கிலோ மலை வாழை பழங்கள் ரசாயனம் தடவி கடை உரிமையாளர்கள் பழுக்க வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி தலைமையிலான குழுவினர் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்டிருந்த 200 கிலோ எடை கொண்ட மலை வாழை பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும்,  அந்த கடைக்கு ₹10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை