கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிஎம்டிஏ, மார்க்கெட் கமிட்டி ஆகியவை நவ.29-க்குள் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறு வியாபாரிகள் இணைந்து மைதானத்தில் தக்காளி விற்க தற்காலிகமாக அனுமதிக்கலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா கட்டுப்பட்டால் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக்கோரி பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எங்கள்  சங்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் 150, 300, 600 சதுர அடி கொண்ட கடையை வைத்துள்ளவர்கள் தான் உள்ளனர். 1200 முதல் 2400 பரப்பளவு சதுர அடி கொண்ட கடைகளுக்கு  வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் தங்களை போன்ற சிறிய கடைகளை கொண்டவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்படாததால் மைதானத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. சிஎம்டிஏ தரப்பில் பொருட்களை இடமாற்றம் செய்ய தான் மைதானம் மைக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு அல்ல எனவேதான் அந்த மைதானத்தை முடியதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, தக்காளி தட்டுப்பாடு, விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் இணைந்து மைதானத்தில் தற்காலிகமாக தக்காளி விற்க அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்து கோயம்பேடு சந்தையில் உள்ள மைதானத்தில் தக்காளி லாரிகளை அனுமதிக்க முடியுமா..? என சிஎம்டிஏ, மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்