கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாடி தோட்டம் அமைத்தல், பராமரித்தல் பயிற்சி

குத்தாலம்,ஆக.4: கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாடி தோட்டம் அமைத்தல் மற்றும பராமரித்தல் பற்றிய பயிற்சி நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இணைந்து நடத்திய மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு பள்ளியின் முதுகலை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குனர் பொன்னி, உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வம் பங்கேற்று மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சியை மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் வழங்கினர். இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில் நன்றியுரை கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை