கோபி அருகே விபத்தில் விவசாயி பலி: வேன் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

கோபி,ஏப்.13: கோபி அருகே உள்ள கெட்டிசெவியூரில் சரக்கு வேன் மோதி விவசாயி உயிரிழந்த வழக்கில் வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் காளிப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம்(66). இவர் கடந்த 23.10.2019 அன்று வீட்டில் இருந்து கெட்டிசெவியூருக்கு மருந்து வாங்குவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பூரில் இருந்து கோபிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று சோமசுந்தரம் சென்ற மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சோமசுந்தரம் உயிரிழந்தார். விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருந்தனர்.இந்த வழக்கு கோபியில் உள்ள ஜே.எம்.1ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி, வேன் டிரைவர் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்தை சேர்ந்த மாரிமத்து மகன் ரவீந்திரன் என்கிற ரவிச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை