கோத்தகிரியில் கரடி உலா

கோத்தகிரி, ஏப்.18: கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி நிலவி விலங்குகளுக்கு ஏற்ற உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கரடி உலா வரும் சம்பவம் குடியிருப்பு வாசிகளை பெரும் அச்சமடையசெய்துள்ளது. இதேபோல் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் மீண்டும் கரடி ஒன்று குடியிருப்பு அருகே உலா வந்துள்ளது.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மேலும் குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது. எனவே, இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்து ஏதேனும் அவசர தேவைக்கு வெளியே வரவேண்டும் என்றால் பெரும் அச்சத்துடன் வரவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதுசம்பந்தமாக அரவேனு பெரியார் நகர் பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க பலமுறை வனத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி