கோட்ைட மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

சேலம், ஜூலை 25: ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா எடுக்கப்படும். இவ்விழாவையொட்டி நேற்றிரவு அம்மனுக்கு கோலாகலமாக பூச்சாட்டுதல் விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றும் விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து 30ம் தேதி கம்பம் நடுதல், திருக்கல்யாணம் உற்சவமும், 5ம் தேதி சக்தி அழைப்பும், 6ம் தேதி சக்தி கரகமும், 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை பொங்கல் வைபோகம், உருளுதண்டம், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி