கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மினி பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

 

கரூர், ஏப். 22: கரூர் மினி பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் கோடை வெயிலில் தப்பித்துக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இதன் அருகிலேயே மினி பஸ் நிலையம் உள்ளது. இந்த மினி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் இதில் பயணித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கரூர் மாவட்டம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பிரதான பஸ் நிலையத்திலும் மக்கள் ஒதுங்கி நிற்கு எந்த வழியும் இல்லாத நிலையில், அருகில் உள்ள மினி பஸ் வளாகத்திலும் எந்த வசதியும் இல்லை.

இதன் காரணமாக, கடும் வெயிலை சமாளித்துக் கொண்டு, பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு செல்லும் பேருந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். எனவே, கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பிரதான பஸ் நிலையம் மற்றும் மினி பஸ் நிலையம் அருகே அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்