கோடை வெப்பத்தால் உற்பத்தி கடும் பாதிப்பு பீன்ஸ், வெண்டை விலை ‘கிடுகிடு’ உயர்வு

சென்னை: செடிகள் வெப்பத்தால் கருகியதால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, மலர், காய்கறிகள், கனிகள் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, பீன்ஸ், வெண்டைக்காய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் நேற்று ஒரு கிலோ  ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் நேற்று ரூ.40க்கு விற்கப்பட்டது. நாட்டு தக்காளி விலை குறைந்தது.ரூ.40க்கு விற்கப்பட்ட அது, நேற்று ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம்ஒரு கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்ட பெங்களூரு தக்காளி நேற்று ரூ.40க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300க்கு  விற்கப்பட்டது. தற்போது சீசன் என்பதால், முருங்கைக்காய் வரத்து அதிகரித்து, நேற்று ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மாங்காய் தற்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.5 விலை குறைந்து, அது ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ பெங்களூரூ தக்காளி ரூ.45ல் இருந்து ரூ.40க்கு விற்கப்படுகிறது.கோடை காலம் தொடங்கிவிட்டதால், பறிப்பதற்கு முன்னரே, செடியில் பீன்ஸ், வெண்டைக்காய் மற்றும் தக்காளி வாடி, வதங்கி விடுகிறது. எனவே, அவற்றின் வரத்து குறைந்துவிட்டது. இதனால், பீன்ஸ், வெண்டை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. மேலும், தக்காளி விலை உயர வாய்ப்புள்ளது.’’ என்றார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை