கோடை மழை கொட்டி தீர்த்தது கரூரில் மாவட்டத்தில் 8.மி.மீட்டர் பதிவு

 

கரூர், ஜூன் 10: கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 8 மி.மீ மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. அக்னி நட்சத்திர காலமாக மே 4ம்தேதி முதல் 28ம்தேதி வரை அதிகளவு வெயிலின் தாக்கம் இருக்கும் என நினைத்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக, கரூர் மாவட்டம் முழுதுவம் அதிகளவு மழை பெய்து, கரூரை குளிர்வித்தது. இதனால், அனைவரும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர்.

இந்நிலையில், ஜூன் மாதம் பிறந்ததில் இருந்து திரும்பவும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதனால், அனைத்து தரப்பினர்களும் திரும்பவும் அவதியை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, தென்மேற்கு பருவமழையின் துவக்க காலமான ஜூன் மாதம் முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, கடந்த 5 நாட்களாக மாலை நேரத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து கரூரை குளிர்வித்து வருகிறது.

இதனடிப்படையில், நேற்று முன்தினம் மாலை கரூரின் சில பகுதிகளில் மழை பெய்து குளிர்வித்தது. இதன்படி, கரூர் மாவட்டத்தில், குளித்தலை 1.8 மிமீ, கிருஷ்ணராயபுரம 5.2 மிமீ, மாயனூர் 1 மிமீ என 8 மிமீ மழை பெய்திருந்தது. மற்ற பகுதிகளில் மழை பதிவாகவில்லை.தென்மேற்கு பருவமழையின் துவக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து கரூர் மாவட்டம் மழையை பெற்று வருவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை