கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயாராகிறது

ஊட்டி: கோடை சீசனுக்காக ஊட்டி மரவியல் பூங்காவை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் மரவியல் பூங்கா ஆகியவை உள்ளன. இதில் மரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள், மூலிகை தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன. மேலும் அழகிய புல் மைதானங்களும் இங்கு காணப்படுகிறது. போதுமான விளம்பரம் இல்லாத நிலையில் இந்த பூங்காவிற்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் செல்வதில்லை. கோடை சீசன் நெருங்கிய நிலையில் நீலகிரியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காற்று தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், மரவியல் பூங்காவும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு மேரி கோல்டு, சால்வியா, டெய்சி உட்பட பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதனை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் மாதம் முதல் இந்த பூங்காவில் பல வகையான மற்றும் வண்ணங்களை கொண்ட மலர்களை காணலாம்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்