கோடை சாகுபடி இலக்கு 635 ஹெக்டேர்

தர்மபுரி, ஏப்.6: தர்மபுரி வட்டாரத்தில் கோடை சாகுபடிக்கான இலக்கு 635 ஹெக்டேராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் உதவி இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு; தர்மபுரி வட்டாரத்தில் கோடை சாகுபடிக்கான இலக்கு 635 ஹெக்டேராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து 45 ஹெக்ேடர், நிலக்கடலை 260 ஹெக்ேடர், எள் 25 ஹெக்ேடர், கம்பு 30 ஹெக்ேடர், சோளம் 250 ஹெக்ேடர் மற்றும் ராகி 25 ஹெக்ேடர் என பயிரிட்டு, கோடை சாகுபடி பரப்பை விவசாயிகள் அதிகரித்து பயன்பெற வேண்டும். இதற்கான விதைகள் தர்மபுரி வட்டார விரிவாக்க மைய கிடங்கு மற்றும் கிருஷ்ணாபுரம் துணை வேளாண் விரிவாக்க மைய கிடங்கில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்