கோடை கால விளையாட்டு போட்டி சிறப்பு பயிற்சி

 

கரூர்: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கரூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடை கால விளையாட்டு போட்டி சிறப்பு பயிற்சியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, ஜூடோ மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டு போட்டிகளுக்காக 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெரும் கோடை கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி முகாமினை மாணவ, மாணவர்களாகிய நீங்கள் இந்த 15 நாட்கள் நடைபெறும் பயிற்சியை நல்ல முறையில் பயிற்சி பெற்று பின்னர் தேசிய அளவில் விளையாடுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக விளையாட வேண்டும். பயிற்சியில் கலந்து கொண்டு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமா சங்கர், தனித்துணை ஆட்சியர் சைபுதீன் மற்றும் உடற்கல்வி பயிற்றுநர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்